2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

மட்டக்களப்பில் ஐரோப்பிய, ஆசிய நாட்டு சமூகப் பணியாளர்கள்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 05 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளைச் சேர்ந்த 45 நாடுகளின் சமூகப் பணியாளர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சமூகப் பணிகளில் ஈடுபடுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வந்துள்ளனர்.

அமெரிக்காவிலிருந்து லோகாஸ் ஹோப் கப்பலில்  இலங்கை  வந்துள்ள இவர்கள், யுத்தம் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியான கொக்கட்டிச்சோலையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை சமூகப் பணியில் ஈடுபட்டனர்.

மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலை மற்றும் பொதுச்சந்தை உட்பட பல இடங்கள் தூய்மைப்படுத்தப்பட்டன. நியூஸிலாந்து, மொங்கோலியா, இங்கிலாந்து, இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸ் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையான சமூகப் பணியாளர்கள் இதில் ஈடுபட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .