Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 06 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
உலக காசநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலமொன்றை களுவாஞ்சிக்குடி பிராந்திய சுகாதார அதிகாரி பணியகம் இன்று புதன்கிழமை நடத்தியது.
களுவாஞ்சிக்குடி பிராந்திய சுகாதார அதிகாரி பணியகத்திலிருந்து ஆரம்பமான இந்த ஊர்வலம் பட்டிருப்பு சந்தி, களுவாஞ்சிக்குடி பிரதான வீதியூடாக சென்று அங்கிருந்து இராசமாணிக்கம் ஞாபகார்த்த மண்டபத்தை சென்றடைந்தது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார திணைக்களப் பணிப்பாளர் எஸ்.சதுர்முகம், களுவாஞ்சிக்குடி பிராந்திய சுகாதார அதிகாரி பணியக பணிப்பாளர் இராஜேந்திரா, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிராந்திய சுகாதார அதிகாரி பணியகங்களின் பணிப்பாளர்கள், தாதிய மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுச்சுகாதார உத்தியோகத்தர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
இதன்போது காசநோய் தொடர்பில் அறிவுறுத்தும் பதாகைகளை ஊர்வலத்தில் கலந்துகொண்டோர் தாங்கியிருந்ததுடன், துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
இராசமாணிக்கம் ஞாபகார்த்த மண்டபத்திலும் காசநோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
அத்துடன் இந்த நிகழ்வில் காசநோய் விழிப்புணர்வு தொடர்பாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிலைய மாணவிகளின் நடனம் நிகழ்வொன்றை வழங்கினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
32 minute ago
58 minute ago
1 hours ago