Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 08 , மு.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஸரீபா)
கோறளைப்பற்று பிரதேசசபைக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள அனைத்து உறுப்பினர்களும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் மக்களின் நலனை கருத்திற்கொண்டு ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டுமென பிரதேசசபையின் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் தெரிவித்தார்.
பிரதேசசபையின் செயலாளர் ரீ.தர்மலிங்கம் தலைமையில் நடைபெற்ற முதலாவது கூட்டத்தொடர் சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.
நமக்கு சபையை நடத்துவதற்கு கட்சி பாகுபாடு முக்கியமானதல்ல. நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து பிரதேசத்தின் அபிவிருத்திக்காக பாடுபட்டு உழைத்து பிரதேசத்தை அனைத்துத் துறைகளிலும் அபிவிருத்தியடையச் செய்வது நம்மை நம்பி வாக்களித்த மக்களுக்கு நாம் செய்யும் நன்றிக்கடனாகும் என்றார்.
கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) பிரதேசசபைக்கு ஒன்பது உறுப்பினர்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்டவர்களில் ஏழு உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக தலா ஒரு உறுப்பினரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
.jpg)
7 hours ago
9 hours ago
30 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
30 Oct 2025