2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

'கிழக்கு மாகாண பொருளாதார வளர்ச்சியில் மீனவர்களின் பங்கு முக்கியமானது'

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 12 , மு.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

கிழக்கு மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சியில் மீனவர்களின் பங்கு மிக முக்கியமானதாகும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண மீனவர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் பொருட்டு கிழக்கு மாகாண மீன்பிடி திணைக்களத்தினால் மீனவர்களுக்கான மீன்பிடி தோணிகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் என்பன நேற்று திங்கட்கிழமை வழங்கப்பட்டன. இதில் உரையாற்றும்போதே  அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

இங்கு இயற்கை வளங்கள் அதிகம் காணப்படுகின்றன. அதிலொன்றுதான் கடல் வளமாகும். கிழக்கு மாகாணத்தில் 436 கிலோமீற்றர் கடல் வளமுள்ளது. இதை சரியாக நாம் பயன்படுத்துவதில்லை. நமக்கு சோம்பல் மற்றும் வளத்தை பயன்படுத்த தெரியாது. இவைகளால் தான் நாம் பயன்படுத்துவதில்லை.

கரையோர சமூகத்தில் இன்று வளர்ச்சி ஏற்பட்டுள்ளதை நாம் பார்க்கின்றோம்.

கிழக்கு மாகாண சபையை நாம் பொறுப்பேற்கும்போது பல நிறுவனங்கள் வேலை செய்தன. அதில் நெக்டப் திட்டமும் ஒன்றாகும்.
கிழக்கு மாகாண பிரதி  மீன்பிடி பணிப்பாளர் சுதாகரன் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மீனவர்களுக்கு 16 இலட்சம் ரூபாய் பெறுமதியான தோணிகள்,; வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இதில் கிழக்கு மாகாண விவசாய மீன்பிடி அமைச்சர் துரையப்பா நவரட்னராஜா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .