2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

லண்டன் அகிலன் பவுண்டேசனின் வாழ்வாதார உதவி

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 12 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

லண்டன் அகிலன் பவுண்டேசினால் வாழ்வாதாரத்தை  மேம்படுத்தும் பல திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், களுவாஞ்சிக்குடி சமூக மேம்பாட்டு அமைப்பின் அனுசரணையுடன் மக்கள் நன்மை கருதி  வாழ்வாதார பிரச்சினைகளுக்கு எதிர்நோக்குகின்ற பெண்களுக்கு தையல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன், அப்பிரதேசத்திலுள்ள வறுமையான பல்கலைக்கழக மாணவர்களுக்கான ஊக்குவிப்புத் தொகை கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தனால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், லண்டன் அகிலன் பவுண்டேசனின் ஸ்தாபகர், எஸ்.வி.ஓ. அமைப்பின் தலைவர் ஏ.சு.மகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .