2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

dd

சிறுவர்களின் ஆளுமை விருத்தி தொடர்பில் செயலமர்வு

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 10 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல் 

மட்டக்களப்பு மாவட்டத்தின்; பட்டிப்பளை பிராந்திய வேள்ட்விஷன் அபிவிருத்தித்திட்ட நிறுவனத்தின் ஏற்பாட்டில், சிறுவர்களின் ஆளுமையை விருத்தி செய்வது தொடர்பில் செயலமர்வு திங்கள் (08) செவ்வாய் (09) ஆகிய இரு தினங்களிலும் முனைக்காடு உக்டா சமூகவள நிலையத்தில் நடைபெற்றது.

நாற்பதுவட்டை கிராமத்தைச் சேர்ந்த 52 சிறுர்களுக்கே இச்செயலமர்வு இடம்பெற்றது.  இதன்போது சிறுவர் உரிமைகள், சிறுவர்களின் ஆக்கங்களை வெளிக்கொணருதல், விளையாட்டு போன்ற செயற்பாடுகளில் சிறுவர்களை ஈடுபடுத்துதல் போன்ற விடயங்கள் பற்றி விளக்கமளிக்கப்பட்டன.

இந்தச் செயலமர்வை  வேள்ட்விஷன் நிறுவன பட்டிப்பளை பிராந்திய அபிவிருத்தி திட்ட கல்வித்திட்ட இணைப்பாளர் இ.அமுதராஜ் ஒழுங்குபடுத்தி நடத்தியிருந்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .