2025 ஜூலை 12, சனிக்கிழமை

200 குடும்பங்களுக்கு பாவனைப் பொருட்கள் விநியோகம்

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 05 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீராகேணிக் கிராமத்தில் வறுமைக் கோட்டுக் கீழுள்ள தெரிவுசெய்யப்பட்ட 200 குடும்பங்களுக்கு தலா 4,500 ரூபாய் பெறுமதியான  பாவனைப் பொருட்கள் இன்று வியாழக்கிழமை வழங்கப்பட்டதாக முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்கா கள நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எம்.ஏ.எம்.அஸ்மி தெரிவித்தார்.

படுக்கை விரிப்புக்கள், துவாய்கள், சவுக்காரங்கள்;, பற்பசைகள், நுளம்பு தடுப்பு வலைகள், வாளிகள், பெண்களுக்கான ஆரோக்கியத் துவாய்கள் என்பன இந்த பொதியில் அடங்கியிருந்ததாக அவர் தெரிவித்தார்.

மேலும் 200 குடும்பங்களுக்கு இவ்வாறு பாவனைப் பொருட்களை நாளை வெள்ளிக்கிழமையும் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவில் விநியோகிக்க இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .