2021 ஜூன் 18, வெள்ளிக்கிழமை

காத்தான்குடி பிரதேசத்தில் சட்டவிரோத எரிபொருள் நிலையங்கள் முற்றுகை: 3 பேர் கைது

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 04 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜவ்பர்கான்)
காத்தான்குடி பிரதேசத்தில் சட்டவிரோத எரிபொருள் நிலையங்களை முற்றுகையிட்ட பொலிஸார், 3பேரை கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து 139 லீற்றர் பெற்றோல் மற்றும் 590 லீற்றர் டீசல் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிமல் குணவர்த்தன தெரிவித்தார்.

காத்தான்குடி பிரதேசத்திலுள்ள 7 சட்டவிரோத எரிபொருள் விற்பனை நிலையங்கள் முற்றுகையிடப்பட்டன. கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார். இன்று சனிக்கிழமை மாலை இம்முற்றுகை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .