Niroshini / 2015 ஒக்டோபர் 11 , மு.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காங்கேயனோடை முகைதீன் மீனவர் கூட்டுறவுச்சங்கத்தின் நெசவு நிலையக் கட்டித்துக்கான அடிக்கல் நாட்டி வைக்கும் வைபவம் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காங்கேயனோடை முகைதீன் மீனவர் கூட்டுறவுச்சங்கத்தின் தலைவர் எம்.எம்.அப்துல் கையூம் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் மண்முனைப் பற்று பிரதேச சபையின் செயலாளர் திருமதி ஜே.அருள்பிரகாசம், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்ட திட்டப்பணிப்பாளர் எல்.பார்த்தீபன், கூட்டுறவுப் பரிசோதகர் ஏ.சசிதரன், அதிபர்களான மௌலவி ஏ.சி.எம்.றிபாய், எம்.றசாக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் 28 இலட்சம் ரூபாய் நிதியுதவியுடன் இந்த நெசவு நிலையக் கட்டடம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
காங்கேயனோடை முகைதீன் மீனவர் கூட்டுறவுச்சங்கத்திலுள்ளவர்களை நெசவுத் தொழிலும் ஈடுபடுத்தி அவர்களின் வாழ்வதாரத்தை மேம்படுத்த இச் சங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக சங்கத்தின் தலைவர் எம்.எம்.அப்துல் கையூம் தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய மண்முனைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் திருமதி ஜே.அருள்பிரகாசம்,
மீனவர்கள் மீன்பிடி தொழிலில் மட்டுமன்றி ஏனைய மாற்று தொழில்களையும் கற்றுக் கொள்ள வேண்டும். அது வாழ்வதாரத்துக்கு சிறந்ததாக அமையும்.
தமிழ், முஸ்லிம்களின் ஒற்றுமைப்பாலமாக திகழும் இந்த காங்கேயனோடை முகைதீன் மீனவர் கூட்டுறவுச்சங்கத்தின் இந்த செயற்திட்டத்தின் மூலம் மேலும் தமிழ், முஸ்லிம் ஒற்றுமை மேம்படுத்தப்படும்.
இந்த முகைதீன் மீனவர் கூட்டுறவுச்சங்கத்தின் நெசவு நிலையக் கட்டத்தில் தமிழ், முஸ்லிம்களுக்கு நெசவுத்தொழில் வழங்கப்படவுள்ளமை பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும் என்றார்.
21 minute ago
39 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
39 minute ago
1 hours ago
2 hours ago