Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Thipaan / 2015 ஒக்டோபர் 10 , மு.ப. 07:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா, வடிவேல் சக்திவேல்
கடந்த சில நாட்களாக போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அட்டகாசம் செய்துவந்த யானையை போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வேத்துச்சேனை கம்பி ஆறுபிரதேசத்தில் வைத்து வன ஜூவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இன்று (10) காலை பிடித்துள்ளனர்.
3 நாட்களாக இப்பிரதேசத்தில் தங்கி இருந்த அதிகாரிகள் மேற் கொண்ட நடவடிக்கையின் பின்பே இன்று காலை காட்டு யானை பிடிபட்டது.
இந்த யானையே போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் கிராம வாசிகளை கொன்றதுடன் அச்சுறுத்தி வந்தது என தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கு மாகாண வன ஜூவராசிகள் திணைக்களத்தின் மிருக வைத்தியர் நிகால் புஸ்பகுமார தலைமையிலான விசேட வைத்தியர்குழு மற்றும் வன ஜூவராசிகள் திணைக்கள 18 அதிகாரிகள், மேற்கொண்ட நடவடிக்கையின் போதே யானை அகப்பட்டது.
இந்த யானை 40 வயதுடையது எனவும் 4 தொன் எடையுடையது எனவும்வைத்தியர் நிகால் தெரிவித்தார்.
யானை மருத்துவ சிகிச்சைகளின் பின்பு ஹொறவப்பொத்தானை யானைகள் சரணாலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
கடந்த 5ஆம் திகதி போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் முன்பாக யானைகளின் அட்காசம் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு 15 கிராமத்தை சேர்ந்த மக்கள் 8 மணிநேரம் வீதி மறியல் போராட்டம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
45 minute ago
49 minute ago