Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2017 நவம்பர் 28 , பி.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போது சில பள்ளிவாசல்களில் மாலை வேளையில் பல வகையான சினிமாப் பாடல் மெட்டுகளில் இசைக்கப்படும் அதிகரித்த ஒலியால் அப்பள்ளிவாசல்களுக்கு அருகிலுள்ளவர்கள், குறிப்பாக மாணவர்கள் கடும் அசௌகரியத்துக்கு உள்ளாகி வருவதாகத் தெரியவருகின்றது.
இது அனைத்து வகுப்பு மாணவர்களுக்குமான வருட இறுதித் தவணைப் பரீட்சைக் காலமாக இருக்கின்ற அதேவேளை, இன்னும் சில தினங்களில் கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கின்ற மாணவர்களுக்கான தேர்வும் நெருங்கிக் கொண்டிருக்கும் முக்கிய காலகட்டமாகவும் உள்ளது.
எனினும், இவற்றையெல்லாம் பொருட்படுத்தாது மாணவர்கள் தமது பரீட்சைக்குத் தயார்படுத்த வேண்டிய அமைதியான மாலை மற்றும் கருக்கல், இரவு நேரங்களில் சினிமாப் பாடல் மெட்டுகளில் அதிகரித்த கோரஸ் ஒலியில் கூட்டாக இசைப்பது அருகிலுள்ள அனைவருக்கும் அசௌகரியத்தை தோற்றுவித்துள்ளது.
மாணவர்கள், நோயாளிகள், வயோதிபர்கள், குழந்தைகளும் இந்த வித சகிக்க முடியாத இசை எழுப்பலால் சங்கடப்படுகின்றார்கள்.
குறிப்பாக ஏறாவூரில் பெரும்பான்மையினரை அதிகமாகக் கொண்ட பொலிஸ் நிலையம், அவர்களது தங்கும் விடுதி, பன்சல, இந்துக்களின் குடியிருப்புகள், அவர்களது கோயில்கள், பாடசாலைகள், கடைத் தெரு, பொதுச் சந்தை ஆகியவை அமைந்துள்ள இடங்களுக்கு அருகிலுள்ள பள்ளிவாசல்களிலிருந்து மாலை நேரத்தில் எழுப்பப்படும் சினிமாப் பாடல் மெட்டுகளில் அமைந்த கோரஸ் இசைகள், பெருத்த அசௌகரியத்தைத் தருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சமகால நாட்டு நடப்புகளை நன்கு உணர்ந்தவர்களாக முஸ்லிம்கள் அறிவார்ந்த ரீதியில், தமது மார்க்க மற்றும் வாழ்வியல் முறைகளை கட்டுக்கோப்புடன் முன்மாதிரியாக வகுத்துக் கொள்வது சிறந்தது என, சமூக நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
26 minute ago
2 hours ago
4 hours ago