2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

அதிகாரி மீது தாக்குதல்

கனகராசா சரவணன்   / 2018 ஜனவரி 13 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, நாவலடி முகத்துவாரம் களப்புப் பகுதியில்,  நேற்று (12) நள்ளிரவு, மீனவர்கள் தாக்கியதில், மீன்பிடித் திணைக்கள அதிகாரி ஒருவர் படுகாயமடைந்தார்.

அவர், மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரென, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த களப்புப் பகுதியில் தடைசெய்யப்பட்ட வலைகள் வீசி மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக, மீன்பிடி திணைக்களத்துக்குக் கிடைத்த தகவலையடுத்து, சம்பவதினமான நள்ளிரவு 12 மணியவில் மீன்பிடி திணைக்கள அதிகாரி ஒருவர் உட்பட 5 பேர் கொண்ட குழுவினர், களப்பில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது, மீனவர்களின் தோணிகளை அதிகாரிகள் சோதனையிட்போது, அவர்கள் மீது மீனவர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனரெனத் தெரியவருகின்றது.

இதில், மீன்பிடி திணைக்கள் சப் இன்பெஸ்டர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

தாக்குதல்களை மேற்கொண்ட மீனவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X