Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Princiya Dixci / 2020 நவம்பர் 04 , பி.ப. 06:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.திவாகரன்
நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய அசாதாரண சூழலைப் பயன்படுத்தி, கிராமப்புறங்களில் உள்ள சிறு வியாபார வர்த்தகர்களும் நடமாடும் வியாபாரிகளும் அதிகூடிய விலைகளில் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர் எனக் குற்றஞ்சாட்டும் பொதுமக்கள், இவ்வாறானவர்கள் குறித்து, உரிய அதிகாரிகள் உடன் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுகின்றனர்.
சந்தைகளுக்கும், பெரிய வர்த்தக நிலையங்களுக்கும் செல்ல முடியாத நிலைகாரணமாக, தமது கிராமங்களிலேயே உள்ள சிறிய வர்த்தக நிலையங்களிலும் நடமாடும் வியாபாரிகளிடமும் மட்டக்களப்பு - படுவான்கரை மக்கள் பொருட்களைக் கொள்வனவு செய்து வருகின்றனர். இதனை சாதமாக்கிக்கொண்டுள்ள அவ்வாறான வர்த்தகர்கள், பொருட்களை அதிக விலைக்கு விற்றுவருவதாக, படுவான்கரை மக்கள் தெரிவித்தனர்.
தொழிலின்றி வருமானத்துக்காக கஷ்டப்படும்போது, இவ்வாறான சுரண்டல்களாலும் இன்னும் அதிக பாதிப்பைத் தாம் எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் விசேட கண்காணிப்புக்களை மேற்கொண்டு, பொருட்களை அதிகவிலைக்கு விற்கும் வர்த்தகர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் டுவான்கரை மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
32 minute ago
49 minute ago