Suganthini Ratnam / 2017 ஜூன் 06 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள 12 பாடசாலைகளில் சேவைப் பிரமாணக் குறிப்பு மற்றும் ஆட்சேர்ப்புத் திட்டத்துக்கு முரணாக அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளை, இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தது.
இது தொடர்பில் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் ஜே.எஸ்.டி.டிம்.அசங்க அபேயவர்த்தன இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளைச் செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் இன்று கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'மட்டக்களப்பு கல்வி வலய நிர்வாகத்துக்கு உட்பட்ட 1 சி வகையைச் சேர்ந்த 2 பாடசாலைகளிலும் வகை 2 ஐச் சேர்ந்த 7 பாடசாலைகளிலும் வகை 3 ஐச் சேர்ந்த 3 பாடசாலைகளிலும் அதிபர்களுக்கான நியமனங்களில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன.
வலயக் கல்விப் பணிப்பாளரின் வெளிப்படைத்தன்மை அற்ற சிபாரிசுக்கு அமைய, இந்தப் 12 பாடசாலைகளிலும் அதிபர்கள், அண்மையில் நியமனம் செய்யப்பட்டுள்ளதை தங்களின் கவனத்துக்கு கொண்டுவருகின்றேன்.
மேலும், முரணானதும் வெளிப்படைத்தன்மை அற்றதுமான இந்த நியமனங்களை உடனடியாக இரத்துச் செய்து, நம்பகத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலுடன் இந்தப் பாடசாலைகளில் அதிபர்களை நியமிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago