Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2020 ஜனவரி 13 , பி.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
1990 அவசர உதவி அம்பியூலன்ஸ் சேவையின் மூலம் அழைத்துச் செல்லப்பட்ட கர்ப்பிணித்தாய்க்குச் செல்லும் வழியிலே, அம்பியூலன்ஸில் பிரசவம் நிகழ்ந்த சம்பவம், மட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டியுள்ள பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதில் சுகப் பிரசவமாக சிசுவைப் பெற்றெடுத்த தாயும், சேயும் நலமாக உள்ளனரென, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பு - பதுளை வீதியை அண்டிய பகுதியில் வசிக்கும் தாயொருவருக்கு, சனிக்கிழமை (11) பிரசவ வலியேற்பட்டவுடன், வவுணதீவில் உள்ள 1990 இலவச அம்பியூலன்ஸ் சேவையின் உதவி நாடப்பட்டுள்ளது.
உடனடியாக உதவிச் சேவைக்கு விரைந்த அம்பியூலன்ஸ் மூலம் கர்ப்பிணித் தாயை ஏற்றிக்கொண்டு, வைத்தியசாலையை நோக்கி அம்பியூலன்ஸ் நகர்ந்த சற்று நேரத்திலேயே, இடைவழியில் அம்பியூலன்ஸிலேயே சுகப் பிரசவம் நிகழ்ந்துள்ளது.
பின்னர் தாயும் சேயும், கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டு, தற்போது நலமுடன் உள்ளனரென வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
14 minute ago
38 minute ago