Princiya Dixci / 2016 செப்டெம்பர் 26 , மு.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்
இலங்கையில் சுற்றுலாப் பிரதேசங்களில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் நன்மை கருதி, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் வழிகாட்டலில் சுற்றுலாப் பொலிஸ் சைக்கிள் ரோந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் பாசிக்குடா கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி நேற்று 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை சுற்றுலாப் பொலிஸ் சைக்கிள் ரோந்து சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சைக்கிள் ரோந்து சேவையை ஆரம்பிப்பதற்கான இடத்தில் கட்டப்பட்டிருந்த பதாகையில் 'சுற்றுலாப் பொலிஸ் வைச்சிக்கள்' ஆரம்பம் என்று எழுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பில், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பாரா என அப்பிரதேச மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
46 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago