Kogilavani / 2016 டிசெம்பர் 14 , மு.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மங்களராயம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர்; 50,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில், இன்று(14) புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.
அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில்; நடந்து கொண்டார், இன ரீதியான பேச்சுக்களை பேசியதாக கூறி, அம்பிட்டிய சுமணரத்தின தேரருக்கு எதிராக, மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் மட்டக்களப்பு பொலிஸார் வழக்கு தாக்கல் செய்தனர்.
இதையடுத்து தேரரை, இன்று புதன்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்துக்கு ஆஜராகுமாறு நீதிமன்றம் அழைப்பானை விடுத்திருந்தது. இதற்கமைவாக, அம்பிட்டிய சுமணரத்தின தேரர், இன்று புதன்கிழமை நீதிமன்றில் ஆஜரானார்.
இவர் தொடர்பிலான வழக்கு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே, இவரை 50,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணையில் நீதவான் விடுதலை செய்ததுடன் எதிர்வரும் ஜனவரி மாதம் 25 ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago