2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

அரசடி வீதிகள் திறக்கப்பட்டன

Princiya Dixci   / 2021 ஜனவரி 25 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, அரசடி கிராம உத்தியோகத்தர் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த வீதிகளில் இரண்டு வீதிகளை தவிர, ஏனைய அனைத்து வீதிகளும் நேற்று (24) மாலை முதல் திறக்கப்பட்டன.

இதன்படி, இக்கிரம சேவகர் பிரிவில் ஐந்து வீதிகள் திறக்கப்பட்டு, இரண்டு வீதிகள் மாத்திரம் மூடப்பட்டுள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அரசடி கிராம உத்தியோகத்தர் பிரிவின் கோட்டமுனை பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றால் ஒருவர் மரணமடைந்ததையடுத்து, இக்கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டதுடன், வீதிகளும் மூடப்பட்டன.

பின்னர் அங்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் 20 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதுடன், ஏற்கெனவே மரணித்த நபரின் மனைவியும் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்தார். 

இந்நிலையில், இங்குள்ள வீதிகளில் இரண்டு வீதிகளைத் தவிர, ஏனைய அனைத்து வீதிகளும் திறக்கப்பட்டுள்ளன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .