Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 ஏப்ரல் 22 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையின் புதிய முதல்வராக, இலங்கை ஆசிரிய கல்வியியலாளர் சேவை தரம் ஒன்றைச் சேர்ந்த, பாலசுந்தரம் பரமேஸ்வரன் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையின் முதல்வராகப் பணிபுரிந்த ஏ.எஸ். யோகராசா கடந்த 19ஆம் திகதி தனது 33 வருட கல்விச் சேவையிலிருந்து ஓய்வு பெற்றதையடுத்து, இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள பரமேஸ்வரன், 2010 பெப்ரவரி முதல் 2018 ஏப்ரல் வரை மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய கலாசாலையில் கல்வி, தர மேம்பாட்டுப் பிரிவுக்கான பிரதி அதிபராக கடமையாற்றியுள்ளார்.
மேலும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைப்பட்டத்தினையும், பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆங்கிலப் பாடநெறி பயிற்சி ஆசிரியராகவும், பட்டப்பின் கல்வி டிப்ளோமாவில் திறமைச்சித்தியை தேசிய கல்வி நிறுவகத்திலும், முது கல்வி மாணிப்பட்டத்தை தேசிய கல்வி நிறுவகத்திலும், முது மாணி ஆசிரிய கல்வியை திறந்த பல்கலைக்கழகத்திலும், முது தத்துவமாணிப்பட்டத்தினை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலும், பட்டப்பின் கல்வி முகாமைத்துவப்பட்டத்தினை தேசிய கல்வி நிறுவகத்திலும் பூர்த்தி செய்து, கல்விச் சேவையில் 36ஆவது வருடத்தில் கால் பதித்துள்ள இவர், தனது 57 ஆவது வயதில் மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய கலாசாலையின் முதல்வர் பதவியைப் பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago