2025 மே 23, வெள்ளிக்கிழமை

‘அரசியலால் மட்டும் எதையும் சாதிக்க முடியாது’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 ஓகஸ்ட் 30 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அரசியலால் மட்டும் எதையும் சாதித்து விட முடியாது என்ற யதார்த்தத்தை இந்நாட்டு முஸ்லிம்கள் புரிந்துகொள்ள வேண்டுமென, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

ஓட்டமாவடி, மாவடிச்சேனையில் திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற முன்னோடிகளைப் பாராட்டும் நிகழ்வில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், மேலும் தெரிவித்ததாவது,

“நல்லாட்சியை எதிர்பார்த்து, அதனைக் கொண்டு வரத் துடித்தவர்கள் மீது முழு நம்பிக்கை வைத்து அனைத்து விதமான ஒத்துழைப்பையும் வழங்கி உருவாக்கிய நல்லாட்சியில் தற்பொது முஸ‪்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அவற்றுக்கான தீர்வுகள், முஸ்லிம்களது அபிலாஷைகள், எதிர்பார்ப்புகள், உரிமைகள் என்பவை கரிசனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமா அல்லது கண்டு கொள்ளப்படாமல் விடப்படுமா என்ற கேள்வியெழுந்துள்ளது.

“எனவே, கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில், இந்த நாட்டு முஸ்லிம்கள் அரசியலில் மாத்திரம் நம்பிக்கை வைத்து தமது அந்தஸ்தை இழந்து விடாமல் கல்வியில் மாத்திரம் முதலீடு செய்து அதனூடாக அனைத்து உரிமைகளையும் அடைந்து கொள்ளப் பாடுபட வேண்டும்.

“கல்வி அறிவின் மூலமாக ஒட்டு மொத்த நாட்டுக்கே உயிரோட்டத்தை வழங்க முடியும்.

“இன, மத பேதமற்று,  முழுநாட்டுக்கும் சேவை செய்கின்ற மெச்சத்தக்க ஒரு சமூகமாக முஸ்லிம்கள் தங்களை வடிவமைத்துக் கொள்ள வேண்டும்.

“கிழக்கு மாகாண சபை உட்பட வேறு எதுவாயினும் ஆட்சி அதிகாரம் மீண்டும் முஸ்லிம்களுக்குக் கிடைக்கலாம் அல்லது கிடைக்காமல் போகலாம். ஆனால், அதனை மாத்திரம் நம்பியிராது கல்வி மூலமாக நிர்வாக அதிகாரத்தைத் தமதாக்கிக் கொள்ள முஸ்லிம்கள் திடசங்கற்பம் கொள்ள வேண்டும்.

“அரசியல் அதிகாரம் கிடைக்காவிட்டாலும் அதனையிட்டு அலட்டிக் கொள்ளாமல் நிர்வாக அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்வதில் இந்த சமூகம் அக்கறை காட்ட வேண்டும்.

“அதுதான் எதிர்காலத்தில் இந்த சமூகத்தைப் பாதுகாக்கின்ற ஒரு மிகப் பெரும் கேடயமாக இருக்கும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X