Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 15 , பி.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
றியாஸ் ஆதம், எம்.என்.எம்.அப்ராஸ்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் 19ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வு, ஏறாவூர் சமூக சேவை நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில், ஏறாவூர் - வாவிக்கரை பூங்கா அருகில், நாளை (16) பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
ஏறாவூர் சமூக சேவை நற்பணி மன்றத்தின் தலைவர் எம்.எஸ்.கபூர்தீன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், அஷ்ரப் பற்றிய நினைவுரைகளும், அவருக்காக துஆப் பிரார்த்தனையும் நடைபெறவுள்ளன.
தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா, முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவுத், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், வீடமைப்பு அதிகார சபையின் தலைவருமான எம்.எஸ்.சுபையிர் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டு, சிறப்புரையாற்றவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago