2025 மே 13, செவ்வாய்க்கிழமை

ஆசிரியர்கள் இடமாற்றம்; மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2019 மே 20 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்

 

கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மாணவர்களின் கல்வியை குழிதோண்டிப் புதைக்கும் செயற்பாட்டில், மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஈடுபட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டியும் எனவே, மாகாணத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகளில் கடமையாற்றும் தமிழ் ஆசிரியர்களை, தமிழ்மொழி பாடசாலைகளுக்கு உடனடியாக இடமாற்றுமாறு கோரியும், அமைதிவழி ஆர்ப்பாட்டமொன்று, மட்டக்களப்பு நகரில், இன்று (20) முன்னெடுக்கப்பட்டது.

 

முற்போக்கு தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில்,  மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு  முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஆர்ப்பாட்டக்காரர்கள் வாயில் கறுப்பு துணியைக் கட்டியாவறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மாகாணத்திலுள்ள தமிழ் பாசடாலைகளில் கடமையாற்றிய முஸ்லிம் ஆசிரியர்களை, முஸ்லிம் பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்ததன் மூலம்,  தமிழ் மாணவர்களின் கல்வியை பலவீனப்படுத்தியுள்ளார் என ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டியதுடன், இதனால் தமிழ் மாணவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சாடினர்.

கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வின் இன ரீதியான செயற்பாட்டை வன்மையாகக் கண்டிப்பதாகவும்  முஸ்லிம் பாடசாலைகளில் கடமையாற்றும் தமிழ் ஆசிரியர்களை,  தமிழ் பாடசாலைகளுக்கு உடனடியாக இடமாற்றுமாறும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், முற்போக்கு தமிழர் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன், அவ்வமைப்பின் உறுப்பினர்கள், மாணவர்களின் பெற்றோர் என பலரும் கலந்துகொண்டனர்.

இவ்விடயத்தை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டுசெல்வதற்கான மகஜரொன்றையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வியாழேந்திரன் எம்.பியிடம் கையளித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X