எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2017 நவம்பர் 30 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, காத்தான்குடி பாத்திமா பாலிகா வித்தியாலயத்தில் ஆண் மாணவர்களை அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி, பெற்றோர்கள் இன்று (30) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள பாத்திமா பாலிகா வித்தியாலயத்தில் ஆண் மாணவர்களை அனுமதிக்க முடியாது என அப்பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளதைக் கண்டித்தும் இப்பாடசாலையில் ஆண் மாணவர்களை அனுமதிக்க வேண்டுமெனக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இவ்வாண்டு இப்பாடசாலையில் முதலாம் தரத்துக்கு சேருவதற்காக விண்ணப்பித்த ஆண் மாணவர்களின் பெற்றோர்கள் தமது பிள்ளைகள் சகிதம் கொட்டும் மழையிலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்பாடசாலையில் 2018ஆம் ஆண்டு முதலாம் தரத்துக்குச் சேருவதற்காக 42 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அந்த ஆண் மாணவர்கள் எவரையும் அனுமதிக்க முடியாது என அப் பாடசாலையின் அதிபர் மறுத்து விட்டார்.
எனவே, எமது மாணவர்களின் கல்வியை கருத்திற்கொண்டு, ஆண் பிள்ளைகளையும் அனுமதிக்க வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் வலியுறுத்தினர்.
இது தொடர்பாக இப் பாடசாலையின் அதிபர் யூனுஸிடம் கேட்ட போது,
“2008ஆம் ஆண்டு இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் இதுவரை ஆண் மாணவர்கள் அனுமதிக்கப்படவில்லை. பாடசாலையில் இடவசதி இல்லை. ஆசிரியர் பற்றாக்குறை, தளர்பாடங்கள் பற்றாக்குறையை ஒழுங்கு செய்துதந்தால் ஆண் மாணவர்களையும் அனுமதிக்க முடியும்” என்றார்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago