Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 ஜூன் 21 , பி.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடி கடற்கரையிலுள்ள விடுதியொன்றில், நேற்று (20) நடத்தப்பட்ட சித்த ஆயுள்வேத தொடுகை வைத்திய முகாமை முற்றுகையிட்ட பொலிஸார், அங்கிருந்த ஆயுள்வேத வைத்தியர்களை, காத்தான்குடி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து, விசாரணைகளை நடத்தினர்.
இந்த ஆயுள்வேத வைத்திய முகாம், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கும் காத்தான்குடி ஆயுள்வேத வைத்தியசாலைக்கும் தெரியப்படுத்தப்படாமல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
போலி ஆயுள்வேத வைத்தியர்கள், இம்முகாமை நடத்துவதாக, காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரிக்குத் தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து, காத்தான்குடி பொலிஸார், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் யூ.எல்.நசிர்தீன், காத்தான்குடி ஆயுள்வேத வைத்தியசாலையின் அதிகாரி டொக்டர் ஜலால்தீன் ஆகியோர் அங்கு சென்றுள்ளனர்.
தொடர்ந்து அங்கு நடத்தப்பட்ட சோதனையில், குறித்த ஆயுள்வேத வைத்திய முகாமை நடத்தியவர்களை, அங்கு வைக்கப்பட்டிருந்த மருந்துப் பொருட்களுடன், காத்தான்குடி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துவந்தனர். இந்நிலையில், குறித்த நபர்கள் தொடர்பான விசாரணைகளை நடத்திய பொலிஸார், அவர்களிடமிருந்து வாக்குமூலங்களையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இவர்கள் தொடர்பில், காத்தான்குடி ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியிடமும், பொலிஸார், வாக்குமூலத்தைப் பெற்றுக்கொண்டனர்.
இந்நிலையில், குறித்த வைத்திய முகாமை நடத்திய வைத்தியர்கள் தொடர்பில் சந்தேகம் இருப்பதாகவும் அவர்களிடம் ஆயுள்வேத வைத்தியர்களுக்கான முறையான அனுமதிப்பத்திரம் இல்லையெனவும், இவர்கள் வைத்திருந்த ஆயுள்வேத மருந்துகள் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், காத்தான்குடி ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
இதன்போது எவரையும் கைது செய்யவில்லை எனவும் இது தொடர்பாக, ஆயுள்வேத வைத்திய சபைக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த ஆயுள்வேத வைத்தியர்கள், வெளிப் பிரதேசங்களில் இருந்து வந்தவர்களென்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago