2025 ஜூலை 21, திங்கட்கிழமை

ஆரையம்பதியில் வடிசாராயம் கைப்பற்று

Editorial   / 2020 ஏப்ரல் 02 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் நிலையில், மட்டக்களப்பு - ஆரையம்பதி, மாவிலங்கத்துறையில், பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து 05 பரல் வடிசாராயத்தை,  காத்தான்குடி பொலிஸார், இன்று (02) கைப்பற்றியுள்ளனர்.

மாவிலங்கத்துறை வாவியில் படகொன்றில் ஏற்றியவாறு வடிசாராயம் கடத்தப்படுவதாக, அப்பிரசேத்திலுள்ள இளைஞர்களும் பொதுமக்களும் காத்தான்குடி பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து, காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறியின் தலைமையில் சென்ற பொலிஸார் குறித்த வடிசாராயத்தைக் கைப்பற்றியுள்ளனர்.

வடிசாராயத்தை, வாவியினூடாக மாவிலங்கத்துறைப் பகுதிக்கு கடத்திச் சென்றுகொண்டிருந்த போது, பொலிஸார் அங்கு வந்தமையால், சாராயத்தைக் கைவிட்டு, அதைக் கடத்திய நபர்கள் தப்பியோடியுள்ளனர்.

05 பரல்கள், 02 கலன்கள் வடிசாராயம், சாராயத்தை உற்பத்தி செய்யும் உபரணங்களையும் இதன்போது கைப்பற்றியுள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

தப்பியோடிய நபர்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X