2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

ஆலயத் திருவிழாவில் பாவனைக்குதவாத 5,000 றம்புட்டான்கள் அழிப்பு

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2018 ஜூலை 04 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, உறுகாமம் மாரியம்மன் ஆலயத் திருவிழாவில் உண்பதற்கு பொருத்தமற்ற பெருமளவு றம்புட்டான் பழங்கள் விற்பனை செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக அப்பகுதிக்குப் பொறுப்பான பொது சுகாதாரப் பரிசோதகர் பி.மனோகரன் தெரிவித்தார்.

சுமார் 5,000 றம்புட்டான் பழங்கள் இவ்வாறு அழிக்கப்பட்டதாகவும் அவை மனித பாவனைக்கு உதவாத, அழுகிய நிலையில் காணப்பட்ட பழங்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுமக்கள் கூடும் இடங்களில் வெளிமாவட்டங்களிலிருந்து வரும் வியாபாரிகளால் பழுதடைந்த உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X