எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2020 ஜனவரி 12 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

களுத்துறைக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கஸ்த்தூரி ஆராச்சியை, காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், இன்று (12) கௌரவித்தது.
காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக, கடந்த இரண்டரை வருடங்கள் கஸ்த்தூரி ஆராச்சி கடமையாற்றியிருந்தார்.
இவரைக் கௌரவித்து வழியனுப்பும் இந்த வைபவம், காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் எம்.சி.எம்.ஏ.சத்தார் தலைமையில், சம்மேளன மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது, காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கஸ்த்தூரி ஆராச்சியைக்குப் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவித்தனர்.
இதில், சம்மேளன செயலாளர் ஏ.எல்.எம்.சபீல் நழீமி, பிரதித் தலைவர் எம்.ஐ.எம்.சுபைர், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகர் டொக்டர் எம்.எஸ்.எம்.ஜாபீர், காத்தான்குடி பொலிஸ் நிலையக் குற்றத்தடுப்பு பிரிவுப் பொறுப்பதிகாரி எம்.முஸ்தபா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
11 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago