2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

இடம்பெற்ற அநியாயங்களுக்கு 'பரிகாரம் வழங்கத் தயாராக வேண்டும்'

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 02 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

நல்லிணக்கத்தைக்  தேடிக்கொண்டிருக்கின்ற இந்த நாடானது இடம்பெற்ற அநியாயங்களைக்; கண்டறிந்து  அவை இனிமேலும் இடம்பெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன்,  அந்த அநியாயங்களுக்குச்  சர்வதேச நியமத்தின் அடிப்படையில் பரிகாரம் வழங்குவதற்கு தயாராக வேண்டும் எனக் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

தாழங்குடா றோமன் கத்தோலிக்கப் பாடசாலையின் விளையாட்டுப் போட்டி சனிக்கிழமை (1) நடைபெற்றது. இதற்கான நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, இந்த நாட்டில் இடம்பெற்ற அநியாயங்களுக்கு  உண்மையைக் கண்டறிந்த பின்னரே இந்த நாட்டில்  நல்லிணக்கம் ஏற்படும். அதை விடுத்து வேண்டாத பிரயத்தனங்களில் ஈடுபடுவதன் காரணமாக எந்தவித நல்லிணக்கத்தையும் நாம் அடைய முடியாது. இச்செய்தியை நான் அரசியல் தலைவர்களுக்குப் பகிரங்கமாக அறிவிக்க விரும்புகின்றேன்.

பாதிக்கப்பட்ட மக்களாகிய நாம், எமது எதிர்காலம் நோக்கி உறுதியான எண்ணப்பாட்டோடு செயற்பட வேண்டும். எமக்குச் சரியான நீதி கிடைக்க வேண்டும்.  நீதி கிடைப்பதற்கான பொறிமுறைகள் தற்போது உருவாகிக்கொண்டிருக்கின்றன. அந்தப் பொறிமுறைகள் சரியான முறையில் செயற்படுத்தப்பட்டு, எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டோடு நாங்கள் செல்ல வேண்டும். அந்த நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கான செயற்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் தலைமையும் தொடர்ந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

மேலும், சர்வதேச விசாரணை என்ற விடயம் வெறுமனே சொல்லப்பட்டது அல்ல. அது தொடர்பான ஆதாரங்களை  சர்வதேச நிபுணர்கள் ஏற்கெனவே சேகரித்து வைத்திருக்கின்றார்கள்' என்றார

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .