Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 ஜனவரி 18 , பி.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
“இந்தத் தேர்தல் முடிவு வட - கிழக்கை இணைக்கப் போவதுமில்லை. இது அரசியல் தீர்வுக்கான தேர்தலுமல்ல” என, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான யு.எல்.எம்.என்.முபீன் தெரிவித்தார்.
காத்தான்குடி நகர சபை தேர்தலுக்கான முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் தலைமை அலுவலகத்தை இன்று (18) திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
முஸ்லிம் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்படும் வாக்கு ரவூப் ஹக்கீமுக்கு அளிக்கப்படும் வாக்கு எனவும் ரவூப் ஹக்கீமுக்கு அளிக்கப்படும் வாக்கு வடக்கு - கிழக்கு இணைப்புக்கு அளிக்கப்படும் வாக்கு எனவும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பொய்யான செய்தியை சொல்லியிருக்கின்றார்.
“இத்தேர்தல், நமது பிரதேசத்தில் நமது ஒவ்வொரு வட்டாரங்களிலும் நமது மக்களுக்கான பணியை செய்வதற்கான நமது மக்கள் பிரதி நிதிகளை உருவாக்குகின்ற தேர்தலாகும். இந்தத் தேர்தலை பொறுத்த வரையில், வட - கிழக்கு இணைப்பு என்பது தமிழர்களின் அடிப்படை கோரிக்கையாக இருக்கலாம். ஆனால், அந்த வட - கிழக்கு இணைப்பு என்கின்ற விடயத்திலே, முஸ்லிம் சமூகத்தை பொறுத்த வரைக்கும் முஸ்லிம்கள் அதற்கு ஒருபோதும் விருப்பம் கிடையாது.
“வட - கிழக்கு இணைப்பது என்றால் முதலாவது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்மதிக்க வேண்டும். அவர்தான் நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொணடவர். ரவூப் ஹக்கீமின் சம்மதத்தாலயோ அல்லது மற்றவர்கள் சம்மதத்தாலயோ வட - கிழக்கு இணைக்கப் போவதில்லை” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
1 hours ago
2 hours ago
4 hours ago