2021 ஜூன் 21, திங்கட்கிழமை

இன்று முதல் ஓய்வூதியம் வழங்கும் பணிகள் ஆரம்பம்

Freelancer   / 2021 ஜூன் 10 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

பயணக்கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நாடளாவிய ரீதியில் உள்ள வங்கிக் கிளைகள் ஊடாக ஓய்வூதியம் பெறுவோருக்கான கொடுப்பனவு வழங்கும் பணிகள் இன்று (10) காலை முதல் நடைப்பெற்றுவருகின்றன.

இதற்கிணங்க மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வங்கிகள் ஊடாக ஓய்வூதியம் வழங்கும் பணிகள் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக அரச வங்கிககள் ஊடாகவே  அதிகளவானோர், தங்களது ஓய்வூதிய கொடுப்பனவுகளைப் பெற்று வருவதை காணமுடிகின்றது.

வங்கிகளுக்கு வருகை தரும் ஓய்வூதியக்காரர்களுக்கான உதவிகளை இராணுவத்தினரும், பொலிஸாரும் வழங்கிவருகின்றனர்.

M

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .