கே.எல்.ரி.யுதாஜித் / 2019 ஒக்டோபர் 21 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

சாதாரண ஒரு பெயர்ப்பலகை விடயத்திற்கே இத்தனை ஆர்ப்பரிப்பு என்றால் தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் எவ்வாறான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவார்களென தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டுமென, கிழக்கு மாகாண முன்னாள் பிரதித் தவிசாளரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் உப தலைவருமான இந்திரகுமார் பிரசன்னா தெரிவித்தார்.
அண்மையில் திறந்துவைக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பெயர்ப்பலகை தொடர்பில், தென்னிலங்கை அரசியல்வாதிகளிடம் இருந்து வெளிப்படும் கருத்துகள் தொடர்பில் இன்று (21) அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கோட்டாபய ராஜபக்ஷ தரப்பிலுள்ளவர்களின் இனவாத ரீதியான கருத்துகளைப் பார்க்கும் போது, அவர்கள் எவ்வாறு தமிழ் மக்களுக்கான விடயங்களைக் கையாள்வார்கள் என சந்தேகிக்கத் தோன்றுகின்றதெனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், இவர்களை நம்பி எமது மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து எவ்வாறு அவர்களுக்கு ஆதரவை வழங்க முடியுமெனக் கேள்வியெழுப்பிய அவர், “நாட்டின் அரசியல் யாப்பை முழுமையாக அறிந்திராத தன்மையை அவர்கள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்” என்றார்.
மேலும், நாட்டின் நிர்வாக மொழிகளாக தமிழ், சிங்கள மொழிகள் உள்ளதாகவும், வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமிழ் மொழிக்கே முதன்மை வழங்கப்பட வேண்டுமென உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
“இவ்வாறான நிலையில், அரசியல் யாப்பில் குறிப்பிட்ட விடயத்தை மேற்கொண்டமைக்கே கொதித்தெழுபவர்கள், தமிழ் மக்களுக்கான தீர்வு அடிப்படையிலான விடயங்களைப் புதிதாக உள்வாங்கி, நடைமுறைப்படுத்துவர்கள் என்பதை எவ்வாறு நம்புவது?” என்றார்
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025