Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2017 செப்டெம்பர் 22 , மு.ப. 08:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
“அற்ப அரசியல் இலாபங்களுக்காக, ஆதாரமில்லாமல் பேசி, சமூகங்களின் இயல்பு நிலையைக் குழப்பும் நிலைமையே, மத்திய மற்றும் மாகாண அரசியல்வாதிகளிடம் இருக்கிறது. இதுவொரு துரோகச் செயலும் நயவஞ்சகமுமாகும்” என, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
கல்வி, பொது வசதிகள் மற்றும் வாழ்வாதாரத் திட்டங்களுக்கான உதவிகளை, ஏறாவூரில், நேற்று (21) வழங்கி வைத்தபின் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “கிழக்கு மாகாணத்தில், சிதறுண்டு கிடந்த நிர்வாகத்தையும் சமூகங்களுக்கிடையிலான சகவாழ்வுக் கட்டமைப்பையும்
“நாம் எமது குறுகிய இரண்டரை வருட கால மாகாண ஆட்சியின் கீழ் வெகு பிரயத்தனத்தின் மூலம் படிப்படியாக முன்னேற்றம் அடையச் செய்துள்ளோம்.
“இந்த யதார்த்தத்தின் அடிப்படையில், சமூகங்களுக்கிடையே இப்பொழுது சந்தேகம் அற்றுப் போயுள்ளது.
“ஆயினும், இதனை ஜீரணித்துக் கொள்ள முடியாத மத்திய மற்றும் மாகாண அரசியல்வாதிகள் ஒரு சிலர், தமது சிறுமைத் தனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
“ஆதாரமில்லாமல் வம்பளப்பதே அவர்களது வாடிக்கையாகி விட்டது. இந்தப் போக்கை அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். ஏனெனில். இனிமேலும் இத்தகைய அரசியல்வாதிகளின் உளறல்களைக் கேட்டு அதனை நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை. பொதுமக்கள் எவ்வளவோ புரிந்துணர்வுடன் மாறி விட்டனர். ஆனால், இந்த அரசியல்வாதிகள் தமது போக்கை சற்றேனும் மாற்றிக் கொள்வதாக இல்லை.
“நாம், அபிவிருத்தி தொடக்கம், அதிகாரப் பங்களிப்பு வரை எந்தவொரு விடயத்திலும் இன, மத, மொழி, பிரதேச, கட்சி வேறுபாடுகள் காட்டியதில்லை.
“நமது மாகாண நிர்வாகத்தின் நிதிப் பங்கீடுகள், உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்கள், சமூக சேவைப் பணிகள், வாழ்வாதாரத் திட்டங்கள், வேலை வாய்ப்புக்கள், வளப் பங்கீடுகள், பதவி உயர்வுகள் என்று, எதனை எடுத்துக் கொண்டாலும் எல்லாவற்றிலும் எந்தவித பாரபட்சமும் காட்டவில்லை என்பதை ஆதாரத்தோடு, ஆவணங்களாக வைத்திருக்கிறோம்.
“ஆனால், வெட்டிப் பேச்சுப் பேசி, சமூகங்களைக் குழப்பும் கீழ்த்தரமான பண்பாடுகளை, சம்பந்தப்பட்டவர்கள் மீள் பரிசீலனை செய்து சமகாலப் போக்குக்கு மாற வேண்டும்.
‘இலஞ்சம், ஊழல், இனத்துவேசம் போன்றவை எமது மாகாண நிர்வாக ஆட்சியின் கீழ் ஒரு போதும் இருந்ததில்லை. அதனால்தான், அச்சமின்றி எதிரும் புதிருமாக இருந்த எல்லாக் கட்சிகளையும் எல்லா இனங்களையும் இணைத்து ஆட்சி செய்ய முடிந்தது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .