2025 மே 21, புதன்கிழமை

’இரட்டைப் படுகொலையாளிகளுக்கு ஆதரவாக ஆஜராக வேண்டாம்’

Editorial   / 2017 நவம்பர் 13 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடிக் கிராமத்தில் கடந்த 18.10.2017 அன்று இடம்பெற்ற இளம் தாய் மற்றும் மகன் இரட்டைப் படுகொலையாளிகளுக்கு ஆதரவாக ஆஜராக வேண்டானெக் கோரி, கிராம மக்கள், இன்று (13) காலை ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியருகே  ஏறாவூர், ஆறுமுகத்தான் குடியிருப்பில் இடம்பெற்ற இவ்வார்ப்பாட்டத்தில் சவுக்கடி, ஆறுமுகத்தான் குடியிருப்பு, மயிலம்பாவெளி, தன்னாமுனை உள்ளிட்ட அயற் கிராமங்களிலுள்ள பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

“இந்த இரட்டைப் படுகொலையில் பொலிஸாரும் விசேட புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து கொலைகாரர்களை மிகவும் கஷ்டப்பட்டு பிடித்தார்கள். அவர்களது பணியை மிகவும் சிறப்பாக செய்துள்ளனர். ஆனால், குற்றவாளிகளைக் காப்பாற்றும் வகையில் ஒரு சில சட்டத்தரணிகள் முயல்வது மிகவும் கவலைக்குரியது” என இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் தெரிவித்தனர்.

கொலைகாரர்களுக்குச் சார்பாக சட்டத்தரணிகள் எவரும் ஆஜராகக் கூடாது. அதேவேளை, கொலைவயாளிகளுக்கு அதிகூடிய தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

அமைதியான முறையில் இடம்பெற்ற இவ்வார்ப்பாட்டத்தின்போது, பொலிஸாரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

இப்படுகொலையின் பிரதான இரு சந்தேகநபர்கள், படுகொலை இடம்பெற்ற வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட தங்க ஆபரணங்களுடன் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X