2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

இரத்ததான நிகழ்வு

Editorial   / 2018 ஏப்ரல் 25 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 கே.எல்.ரி.யுதாஜித், வா.கிருஸ்ணா
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நிறுவுநர் தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் 41ஆவது நினைவு தினத்தையொட்டி, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு - நல்லையா வீதியில் அமைந்துள்ள கட்சி மாவட்டக் காரியாலயத்தில், நாளை (26) காலை 08.30 மணி முதல், இரத்ததான நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணி உபதலைவரும், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமாகிய வி.பூபாளராஜா தலைமையில், இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் இரத்ததானம் வழங்க அனைவரையும் கலந்துகொள்ளுமாறு, ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X