Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஏப்ரல் 26 , பி.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகரும், தலைவருமான தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் 41ஈவது நினைவு தினத்தை முன்னிட்டு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் ஏற்பாட்டு செய்த இரத்ததான நிகழ்வு, மட்டக்களப்பு நல்லையா வீதியில் அமைந்துள்ள கட்சி மாவட்டக் காரியாலயத்தில், இன்று (26) இளைஞர் அணியின் உபதலைவரும், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான வி.பூபாளராஜா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவான், மாநகரசபை உறுப்பினர்களான சிவம் பாக்கியநாதன், து.மதன், அ.கிருரஜன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கான வைத்தியர் கே.ஹரிசாந் தலைமையிலான குழுவினரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
14 minute ago
46 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
46 minute ago
1 hours ago