2025 மே 19, திங்கட்கிழமை

இரத்த தானம் செய்ய வருமாறு பொது அழைப்பு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 பெப்ரவரி 01 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் ஏறாவூர் கிளையின் ஏற்பாட்டில், ஏறாவூர் அல்முனீறா பாலிகா மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில், எதிர்வரும் 3ஆம் திகதி, இரத்ததான முகாமான்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரத்ததான முகாம், காலை 8 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை இடம்பெறும் என்று ​அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவு வைத்தியர்கள் மற்றும் தாதியர்களால் வழங்கப்படும் இந்த இரத்ததானம், மட்டக்களப்பு இரத்த வங்கிக்காக சேமிக்கப்படுகின்றது.

இரத்த தானம் வழங்கவுள்ள பெண்களுக்கென்று, விஷேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.  இந்த இரத்ததானத்தில் பங்கேற்குமாறு, பொதுமக்கள் கோரப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X