2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இரத்த தான முகாம்

Editorial   / 2018 மே 01 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆரையம்பதி வடக்கு இளம்தென்றல் விளையாட்டுக்கழகம், காந்தி இளைஞர் கழகம் மற்றும் பாரதி சனசமூக நிலையம் ஆகியன இணைந்து நடாத்திய 'உதிரம் பகிர்ந்து, உயிர் காப்போம்!' எனும் தொனிப்பொருளிலான இரத்ததான முகாம், நேற்றுமுன்தினம் (29), ஆரையம்பதி ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய முன்றலில், ஏற்பாட்டுக்குழுத் தலைவர் வைத்தியலிங்கம் சிவராஜ் தலைமையில் இடம்பெற்றது.

இவ் இரத்ததான நிகழ்வானது, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கி பொறுப்பதிகாரி  Dr.விவேகானந்தநாதன், பொது சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் நடைபெற்றதோடு, கழகங்களின் அங்கத்தவர்கள், அதிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரும் நிகழ்வுக்கு சிறந்த பங்களிப்பு நல்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன், மாவட்ட வைத்திய அதிகாரி Dr.S.F.அல்மேடா, காத்தான்குடி பொலிஸ் பொறுப்பதிகாரி N.P.கஷ்தூரி ஆராய்ச்சி, காத்தான்குடி போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி துசார, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தாதிய சங்கத்தலைவர் பூ.புஸ்பராஜா மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X