Editorial / 2020 பெப்ரவரி 13 , பி.ப. 07:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்
இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் நால்வர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவமொன்று, நேற்று (12) இடம்பெற்றுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் தெரியவருவதாவது, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செம்மண்ணோடை சாட்டோ வீதியால், மோட்டார் சைக்கிள்களில் வந்த குழுவினர், அவ்விடத்தில் நின்ற மற்றுமொரு குழுவினர் மீது, சரமாரியாக தாக்குதல்களை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இரு குழுக்களுக்குமிடையில் ஏற்பட்ட பழைய முரண்பாடு ஒன்றே குறித்த சம்பவத்துக்குக் காரணமாக அமைந்துள்ளது என்று, பொலிஸாரின் விசாரணையின் பின்னர் தெரியவந்துள்ளது.
காயமடைந்த நால்வரும், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, தாக்குதல்களை நடத்தியவர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்களை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

14 minute ago
27 minute ago
38 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
27 minute ago
38 minute ago
2 hours ago