2025 மே 06, செவ்வாய்க்கிழமை

இருவரினால் 2 தடவைகள் திறக்கப்பட்ட ஆய்வுகூடங்கள்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம்

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள 02 பாடசாலைகளில் நிர்மாணிக்கப்பட்ட விஞ்ஞான ஆய்வுகூடங்களை ஒரே நாளில் இருவர் இரண்டு தடவைகள் திறந்துவைத்த சம்பவம், அவ்வலயத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

ஓட்டமாவடி பாத்திமா பாலிகா வித்தியாலயம் மற்றும் மீராவோடை அல் ஹிதாயா பாடசாலைகளுக்கான ஆய்வுகூடங்களே இவ்வாறு திறந்துவைக்கப்பட்டன.

கிராமிய பொருளாதாரப் பிரதியமைச்சர்; எம்.எஸ்.எஸ்.அமீர் அலி 02 பாடசாலைகளின் ஆய்வுகூடங்களையும் அப்பாடசாலைகளுக்கு திடீரெனச் சென்று திறந்துவைத்தார்.

மேற்படி ஆய்வுகூடங்கள் திறந்துவைக்கப்பட்டு சில மணித்தியாலங்களின் பின்னர் அழைப்பு விடுக்கப்பட்ட பிரதிநிதி என்ற வகையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டும் இந்த ஆய்வுகூடங்களை திறந்துவைத்துள்ளார்.  

மாகாண மற்றும் மத்திய அரசுகளின் அதிகார இழுபறி காரணமாகவே இந்த நிலைமை  ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இந்த இழுபறி நிலைக்குக் காரணம் என்னவென்றால், குறித்த பாடசாலைகள் மாகாண சபையின் கீழ் செயற்படுவதாக மாண சபை கூறுகிறது. ஆனால், இதற்கான நிதி மத்திய அரசினால் ஒதுக்கப்பட்டதாக மத்திய அரசு பிரதிநிதிகள் கூறுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X