Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 டிசெம்பர் 04 , பி.ப. 01:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எல்.எம்.ஷினாஸ்
“இலங்கை முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சியின் அடிநாதம் மருதமுனையாகும். இதனை யாரும் மறந்துவிட முடியாது. மருதமுனையின் கல்வியை வளர்க்காத ஒருவன் ஒரு போதும் முஸ்லிம்களின் கல்வியின் பால் அன்பும் ஆதரவும் கொண்டவனாக இருக்க முடியாது” என, கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரி.அப்துல் நிஸாம் தெரிவித்தார்.
முஸ்லிம்களின் கல்வி தொடர்பான விடயங்களில் ஒரு மாகாணக் கல்விப் பணிப்பாளராக இருந்து கொண்டு, முஸ்லிம்களின் கல்வி பற்றி தனியாக பேசுகின்ற ஒருவனாக என்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. ஆனால், எனக்கு அடையாளம் தந்த ஒரு சமூகத்தை மறந்து விட்டு பேசுவதற்கும் நான் தயாராக இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலயத்தின் பெற்றோர் சமூகம் ஏற்பாடு செய்த தரம்-05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த புலமையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு, பாடசாலையின் அதிபர் ஏ. குனுக்கத்துல்லா தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் தெரிவித்ததாவது,
“மருதமுனை கிராமத்தில் கடந்த காலங்களில் தனித்தனியான கல்லூரிகளின் வளர்ச்சி பற்றிய கருத்து வேர்ஊன்றி போய் இருந்த போது மருதமுனை பல பின்னடைவை எதிர்கொண்டிருந்தது. இதனை இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
“ஒரு கல்லூரியின் வளர்ச்சி என்பது வேறு, ஒரு ஊரின் வளர்ச்சி என்பது வேறு என்பதை இன்று மருதமுனை மக்கள் புரிந்திருக்கிறீர்கள்.
“எங்களுடைய சமூதாயத்தின் அறிவு தொடர்பான இருப்பை பல்வேறு பிரதேசங்களிலும் நிலைநிறுத்திக் கொண்டிருக்கின்ற ஒரே ஒரு தன்மானம் உள்ள வெற்றியடைந்த ஊர் என்றால் அது மருதமுனையை தவிர வேறு எந்த ஊருமல்ல.
“எனவே, மருதமுனையின் கல்வி முன்னேற்றத்தை அழிப்பதற்கு அல்லது மழுங்கடிப்பதற்கு எவரும் முன்வரக்கூடாது. நீங்கள் உங்களுக்குள்ளே இருக்கும் பிரிவினைகளை விட்டெழியுங்கள். சில குறிப்பிட்ட காலம் மிகக் கூடுதலாக மருதமுனை மக்களாகிய நீங்கள் இழந்திருக்கிறீர்கள். இந்த இழப்பு கிழக்கு மாகாண முஸ்லிம் சமூகத்தின் ஒட்டுமொத்த இழப்பாகும்.
“ஒரு ஊர் ஒரு பிரதேசம் மிகப் பொரும் சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது அந்த ஊரில் அல்லது அந்தக் கல்வி வளர்ச்சியில் ஒரு தாக்கம் ஏற்படும் போது அந்த சமூதாயத்தை சார்ந்த இன்னெரு பிரதேசம் அந்த இடைவெளியை நிரப்புவதற்கு முன்வர வேண்டும்.
“மருதமுனை பின்னடைந்திருந்த இடைக்காலத்தில் அந்த இடைவெளியை நிரப்புவதற்கு கிழக்கு மாகாணத்தில் மாத்திரமல்ல முழு இலங்கையிலும் எந்தவொரு முஸ்லிம் பிரதேசமும் இதனை செய்ய முன்வரவில்லை. அதனால்தான் சொல்கிறேன் அதனை செய்யும் தகைமை மருதமுனைக்கு மட்டும்தான் உண்டு என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன்” என்றார்.
இந்த நிகழ்வில் கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜெலீல், சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹுதுல் நஜீம், பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலான, ஆணையாளர் ஜெ.லியாக்கத் அலி, “செஸப்“ அமைப்பின் செயற்திட்டப் பணிப்பாளர் எம்.ஐ.எம்.வலீத் உட்பட பெற்றோர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இங்கு 2015ஆம், 2016ஆம், 2017 ஆம் ஆண்டுகளில் காதனை படைத்த 64 மணவா்களும் இவா்களுக்கு கற்பித்த ஆசிரியர்களும் நினைவுச் சின்னம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கொரவிக்கப்பட்டார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
50 minute ago
54 minute ago
3 hours ago