Princiya Dixci / 2016 நவம்பர் 16 , மு.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் அம்மன்றத்தின் சர்வதேச இளைஞர் தொடர்புப் பிரிவு ஆகியவை இணைந்து பங்களாதேஷ் நாட்டில் ஏற்பாடு செய்துள்ள, 4ஆவது இளைஞர் பரிமாற்றுத் திட்ட நிகழ்வில் கலந்துகொள்வதற்காக
இலங்கையிலிருந்து 15 இளைஞர் மற்றும் யுவதிகள், பங்களாதேஷ் நாட்டைச் சென்றடைந்துள்ளனர்.
பங்களாதேஷ், டாக்காவில் நேற்றுப் புதன்கிழமை 16ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 24ஆம் திகதி வரை இடம்பெறும் இளைஞர் பரிமாற்றுத் திட்ட வெளிக்கள மற்றும் உட்கள நிகழ்வுகளில், உலகின் பல்வேறு நாடுகளிலுமிருந்தும் இளைஞர் மற்றும் யுவதிகள் பங்குபற்றுகின்றனர்.
இதற்கமைய, ஏறாவூரிலிருந்து தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பிரதேச இளைஞர் சம்மேளன உறுப்பினர்களில் ஒருவரான யூசுப் நவாஸ், இந்நிகழ்வுகளில் பங்குபெறுவற்காகச் சென்றுள்ளார்.
பங்களாதேஷ் மற்றும் இலங்கைக்கு இடையிலான இந்த இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டம் இளைஞர்கள் மத்தியில் ஒருங்கிணைந்த நடைமுறைச் சாத்தியமான பயிற்சிகளையும், சிந்தனை மற்றும் கலாசாரப் பரிமாற்றத்தையும் வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்கும் என்று ஒழுங்கமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
28 minute ago
36 minute ago
6 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
36 minute ago
6 hours ago
21 Dec 2025