Kogilavani / 2017 மார்ச் 26 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மோட்டார் சைக்கிளில் அதிவேகமாகச் சென்ற இளைஞர்கள், வீதியில் குறுக்கே சென்ற எருமை மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளில் மோதுண்ட எருமையும், ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளது.
பாலையடிவட்டை பிரதான வீதியில், சனிக்கிழமை மாலை இடம்பெற்ற இவ்விபத்தில், அதேபகுதியைச் சேர்ந்த சபாரெத்தினம் பிரபு (வயது 30) என்பவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, மற்றுமொருவர் படுகாயங்களுக்குள்ளான நிலையில், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .