2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

இழப்பீடு வழங்க விண்ணப்பம் விநியோகம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 மார்ச் 29 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, ஏறாவூர், வந்தாறுமூலை, கரடியனாறு ஆகிய கமநல சேவைப் பிரிவுகளில் உள்ளடங்கும் விவசாயக் கண்டங்களில் கடந்த 2017ஆம் ஆண்டு மானாவாரிச் (மழையை எதிர்பார்த்த நெற்செய்கை) செய்கையின் போது வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன்படி, மேற்படி கமநல சேவை நிலையங்களில் விவசாயிகள் தமக்கான இழப்பீட்டு விண்ணப்படிவங்களைப் பெற்று, அவற்றைப் பூர்த்தி செய்து மிக விரைவாக திருப்பி ஒப்படைக்க வேண்டுமென, ஏறாவூர் மற்றும் வந்தாறுமூலை கமநல சேவை நிலையங்களுக்குப் பொறுப்பான பெரும்பாக உத்தியோகத்தர் ஐ. பதுர்தீன் தெரிவித்தார்.

இழப்பீட்டைக் கோரும் விவசாயிகள், தமது இலவச உரமானிய ஆவணத்தைக் கொண்டிருப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X