Editorial / 2023 ஜூன் 08 , பி.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமைத்து உண்ட உணவு நஞ்சாகியதில் 27 வயதான யுவதி,வியாழக்கிழமை (8) உயிரிழந்ததுடன் பாதிக்கப்பட்ட 3 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம், மட்டக்களப்பு,களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மாங்காடு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
மாங்காட்டு பிரதேசத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாரான 27 வயதுடைய உயேந்தினி என்பவரே இல்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்து பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் சம்பவதினமான இன்று (08) மதிய உணவினை உண்ட பின்னர் சுமார் 2 மணியளவில் இதில் உயிரிழந்த பெண் மற்றும் அவரது 4 மற்றும் 7 வயது இரு குழந்தைகள்; அவரது தாயார் உட்பட 4 பேர் வாந்தியெடுத்த நிலையில் மயக்கமடைந்துள்ளனர்.
அவர்களை கஞவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் 27 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளதுடன் எனைய 3 வரும் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
கனகராசா சரவணன்
03 Feb 2026
03 Feb 2026
03 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
03 Feb 2026
03 Feb 2026
03 Feb 2026