Editorial / 2018 பெப்ரவரி 21 , பி.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான், ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன், கனகராசா சரவணன்
உணவு விஷமானதால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர், மட்டக்களப்பு போதனா வைத்திசாலையில் நேற்று (20) மாலை அனுமதிக்கப்பட்டனர்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடி, பரகத் வீதியிலுள்ள வீடொன்றில், மதிய உணவு உண்டவர்களே, இவ்வாறு பாதிக்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனரென, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
10, 12 வயதுடைய இரு சிறுவர்கள், 57, 31, 40, 21 வயதுடையவர்கள் ஆகியோரே, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மீனின் ஈரல், குடல் போன்ற பாகங்களைச் சமைத்து, இவர்கள் உட்கொண்டுள்ளனர் என, சுகாதார பரிசோதனை ஊழியர்களது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, காத்தான்குடி பொலிஸாரும் சுகாதாரப் பகுதியினரும் மேற்கொண்டு வருகின்றனர்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago