2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

‘உப தபாலகத்தைத் தரமுயர்த்தவும்’

கே.எல்.ரி.யுதாஜித்   / 2018 மே 16 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, சித்தாண்டியிலுள்ள உப தபாலகத்தைத் தரமுயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சிறி ரமண மகரிசி அறப்பணி நிலையத்தின் இலங்கைக் கிளையின் தலைவர் எம்.செல்லத்துரை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
கிளைத் தலைவரால் கையொப்பமிட்டு, இன்று (16) அனுப்பிவைக்கப்பட்டுள்ள கோரிக்கைக் கடிதத்தில், "இந்த உப தபாலகத்தை, மாவடிவேம்பு, விநாயகர்கிராமம், இலுக்குப் பொத்தானை, பெரியவெட்டுவான், பெருமாவெளி, ஈரளக்குளம் உள்ளிட்ட கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர்.
“எந்தவிதமான வசதிகளும் இன்றிக் காணப்படும் இத்தபாலகத்துக்கு வருகை தரும் மக்கள், குடிப்பதற்கான தண்ணீர் வசதிகளோ, அல்லது மலசலகூட வசதிகளோ இன்றி இன்னல்படுகின்றனர். எனவே, இந்தத் தபாலகத்தை தரமுயர்த்தித் தரவேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கடிதத்தின் பிரதிகள், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகாரங்கள் அமைச்சர் அப்துல் ஹாலிம், தேசிய நல்லிணக்கப் பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X