Princiya Dixci / 2020 ஒக்டோபர் 27 , பி.ப. 07:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்
ஏறாவூர் நகர சபையின் 31ஆவது அமர்வு, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எவருமின்றி கோரமில்லாமல், சபை வெறிச்சோடிக் காணப்பட்டதால், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தின் ஆலோசனையின் பேரில், பிறிதொரு தினத்துக்குக் கூட்டம் பிற்போடப்பட்டது.
ஏறாவூர் நகர சபையின் மாதாந்த அமர்வு, நகர சபைத் தலைவர் இறம்ழான் அப்துல் வாஸித் தலைமையில், நகர சபை சபா மண்டபத்தில் இன்று (27) கூடியபொழுது அக்கூட்டத்துக்கு நான்கு உறுப்பினர்களே சமுகமளித்திருந்தனர்.
இதையடுத்து, அடுத்த சபை அமர்வு, அடுத்து வரும் 15 தினங்களுக்குள் கூட்டப்படும் என, சபை மேயரால் அறிவிக்கப்பட்டது.
இதேவேளை, சாமித்தம்பி சுதாகராசா எனும் அங்கத்தவர் தான் சுகயீனம் காரணமாக சபை அமர்வுக்குச் சமுகமளிக்க முடியவில்லை என கடிதம் மூலம் அறிவித்திருப்பதாக செயலாளர் சபையின் கவனத்துக்குக் கொண்டு வந்திருந்தார்.
20 minute ago
26 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
26 minute ago
50 minute ago