2025 மே 05, திங்கட்கிழமை

உல்லாச விடுதியில் 22 பேருக்கு பி.சி.ஆர்

Princiya Dixci   / 2021 மே 23 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா தொற்று அதிகரித்துக் காணப்படும் நிலையில், தொடர்ச்சியாக சுகாதாரப் பிரிவினரால் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றன.

அத்துடன், வாழைச்சேனை, மருதநகர் கிராமத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அக்கிராமம் முடக்கப்பட்டு காணப்படுகின்றது. இதனுடன் தொடர்புபட்டவர்களின் விவரங்கள் திரட்டப்பட்டு, தொடர்ச்சியாக பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதன்படி, மருதநகர் கிராமத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் கடமையாற்றிய நட்சத்திர உல்லாச விடுதியில் கடமை புரியும் 22 பேருக்கு, இன்று (23) பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ்  தெரிவித்தார்.

இதன் மாதிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த பி.சி.ஆர். பரிசோதனையில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஆர்.நிதிராஜ் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X