Editorial / 2019 மே 16 , பி.ப. 01:19 - 0 - {{hitsCtrl.values.hits}}


வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களை, உளநல ஆற்றுப்படுத்தும் முகமாக தொண்டர்களைத் தயார்படுத்தும் பயிற்சிநெறி, மட்டக்களப்பு கல்லடியிலுள்ள கிறீன்கார்டன் விடுதியில், இன்று (16) நடத்தப்பட்டது.
இலங்கைச் சொஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை நடத்திய இந்தப் பயிற்சிநெறியில், மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 30 தொண்டர்கள் பங்கேற்றனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் உளநல வைத்தியநிபுணர் தன.கடம்பநாதன், உளநல பயிற்றுவிப்பாளர் பெலிசியன் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டனர்.
பயிற்சிநெறி நாளை (16) மாலையுடன் நிறைவுபெறவுள்ளதுடன் முடிவில் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.
பயிற்சிநெறி முடிவுற்றதும் தொண்டர்கள் கள விஜயம் மேற்கொண்டு, உளநல ஆற்றுப்டுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளனர் என்று, இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின மட்டக்களப்புக் கிளையின் தலைவர் த.வசந்தராசா தெரிவித்தார்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago