2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ஊடகவியலாளர் நிமலராஜனின் 19ஆவது நினைவேந்தல்

Editorial   / 2019 ஒக்டோபர் 20 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம், எம்.எஸ்.எம்.நூர்தீன்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 19ஆவது நினைவேந்தல் நிகழ்வு, மட்டக்களப்பு தமிழ் ஊடகவியாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு - காந்திபூங்காவுக்கு அருகாமையில் நேற்று (19) மாலை நடைபெற்றது.

ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர மேயர் தி.சரவணபவான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், மாநகரசபை உறுப்பினர் சிவம் பாக்கியநாதன் உட்பட ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர், உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது வருகை தந்தோரால் நிமலராஜனின் உருவப்படத்துக்கு நினைவுச் சுடரேற்றப்பட்டு, மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X